தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளை கன மழை

by Editor / 17-08-2022 10:16:06pm
 தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளை கன மழை

சென்னை : தமிழகத்தில், 21 மாவட்டங்களில், நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக பகுதிகளின் மேல், வளி மண்டலகீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், தேனி உட்பட, 21 மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo