திருவாரூர் செல்லும் முதல்வர்

by Editor / 08-06-2021 10:11:22am
திருவாரூர் செல்லும் முதல்வர்
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்யவுள்ளார்.
  • திருக்குவளையில் தந்தை கருணாநிதி வாழ்ந்த இல்லம், தாத்தா, பாட்டி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற ஒரு மாதங்களை கடந்துள்ள நிலையில், அவர், இந்த ஒருமாதத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்,மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், வரும் 12-ம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்யவுள்ளார். முதல்வரான பின் மு. க.ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். முதல்வர் அவர்கள் வரும் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த பிறகு திருவாரூர் செல்ல உள்ளார்.

மேலும், திருக்குவளையில் தந்தை கருணாநிதி வாழ்ந்த இல்லம், தாத்தா, பாட்டி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.

 

Tags :

Share via