வெளிநாடுகளில் உதயநிதியையும் தன்னையும் அண்ணன்,தம்பி என்று சொல்வார்கள் என மு.க.ஸ்டாலின்.

by Editor / 21-08-2022 11:10:41am
வெளிநாடுகளில் உதயநிதியையும் தன்னையும் அண்ணன்,தம்பி என்று சொல்வார்கள் என மு.க.ஸ்டாலின்.

சென்னை அண்ணா நகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் உள்ள சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் ஆறாவது வாரமான இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், அங்கு இறகுபந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினார். மேலும் பொதுமக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி இத்தனை சிறப்பாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்றார். உடற்பயிற்சி செய்ததன் மூலமாகவே தன்னால் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடிந்தது என்றும் விளக்கமளித்தார்.

மேலும், உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதால், வெளிநாடுகளுக்கு சென்றால் தன்னையும் தன் மகனையும் அண்ணன் தம்பி என்று சொல்வார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags :

Share via