ஜம்மு காஷ்மீரில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்-சேதம் குறித்து தகவல் இல்லை.

by Editor / 23-08-2022 08:24:18am
ஜம்மு காஷ்மீரில்  அதிகாலை ஏற்பட்ட  நிலநடுக்கம்-சேதம் குறித்து தகவல் இல்லை.

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் கத்ராவில் இருந்து கிழக்கே 61 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவிமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை விவரங்கள் வெளியாகவில்லை.

 

Tags :

Share via