ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம்

by Editor / 25-08-2022 01:35:42pm
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை மத்திய தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

தகுதி நீக்க நடவடிக்கையை கவர்னர் விரைவில் எடுக்கலாம். இதன் மூலம் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் சோரனின் கட்சி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 9A ஐ மீறியதாக ஆணையம் கண்டறிந்தது. சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க குத்தகையை தனக்கு தானே வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பாஜக தேசிய துணைத் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான ரகுபர் தாஸ், இந்த ஆண்டு பிப்ரவரியில் சோரன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். 2021 ஆம் ஆண்டில், சுரங்கத் துறையால் கையாளப்பட்ட சோரன் சுரங்க குத்தகை, அதற்குச் சாதகமாக மாறியது. இது ஊழல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை மீறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தை சோரன் நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via