ஒலிம்பிக் போட்டிக்கு ..சிறப்பாக தயாராகி வருகிறேன்!

by Editor / 24-07-2021 11:32:01am
ஒலிம்பிக் போட்டிக்கு ..சிறப்பாக தயாராகி வருகிறேன்!

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு, இந்திய அணியில் மானு பாகெர் தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பெற்றுள்ள 13 வீரர், வீராங்கனைகள் குரோஷியாவில் ,பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று பெருமை சேர்க்க கூடியவராக கருதப்படும் இந்திய வீராங்கனை 19 வயதான மானு பாகெர்10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பந்தயங்களில் களமிறங்குகிறார். ஒலிம்பிக் போட்டி குறித்து மானு பாகெர் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது, " ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கு இந்த குரோஷியா பயணம் உதவியாக உள்ளது. அதோடு சூட்டிங் ரேஞ்சில் சிறப்பான பயிற்சி மேற்கொண்டு, சில போட்டிகளிலும் பங்கேற்று வருகிறோம்.

இதைவிட சிறப்பான முறையில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக முடியாது, என நான் நம்புகிறேன். துப்பாக்கி சுடுதல் போட்டியில் , எனக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதவில்லை .அதோடு துப்பாக்கி சுடுதல் பொறுத்தவரை, இந்திய அணியில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் , யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதேபோல் பேட்மிண்டன், வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர், வீராங்கனைகள் இருக்கின்றனர் .நான் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில், பங்குபெற்று நன்றாக புள்ளிகள் குவித்தேன் . இருந்தாலும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது, அவசியம் என கருதுகிறேன். முதலில் பயிற்சியில் நிலையாக கவனத்தை செலுத்தி ,அதனை போட்டியிலும் செயல்படுத்துவேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ,மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு", என்று அவர் கூறினார் .

 

Tags :

Share via