சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை" - முன்னாள் நிதியமைச்சர் !

by Editor / 09-06-2021 11:33:55am
சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை

"சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை" முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்!

கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர்.

"ஜூன் மாதத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 42 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. அவற்றில் 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. மீதமுள்ள 36 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதில் வரும் 13-ம் தேதிக்குள் 6 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது உண்மைதான் என்றும் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசின் மீதான தனது விமர்சனத்தை ட்விட்டரில் வாயிலாக முன்வைத்துள்ளார்.

 

Tags :

Share via