சாலை விபத்தில் வாலிபர் பலி:. தந்தை படுகாயம்.

by Staff / 21-03-2023 05:28:01pm
சாலை விபத்தில் வாலிபர் பலி:. தந்தை படுகாயம்.

கோவை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (59). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மகன் கார்த்திக் ராஜாவுடன்(31) சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டு விசேஷத்திற்காக காரில் வந்தார். இந்த கார் பெருந்துறையை அடுத்துள்ள சரளை அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி முந்த முயன்ற போது, திடீரென நிலை தடுமாறி, ரோட்டில் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கார்த்திக் ராஜா தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையிலும், அவரது தந்தை ரவிச்சந்திரன் பலத்த காயங்களுடனும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் ராஜா பரிதாபமாக இறந்தார். ரவிச்சந்திரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo