தடுப்பூசிஇலவசம்  என்ற பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி   எடப்பாடி பழனிசாமி

by Editor / 09-06-2021 04:09:40pm
 தடுப்பூசிஇலவசம்  என்ற பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி   எடப்பாடி பழனிசாமி

 

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதியிலிருந்து நாட்டில் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் ஒன்றிய அரசு சார்பில் இலவசமாக கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார்.
மேலும் நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும் என்று கூறினார். இந்த அறிவிப்பு காலம் கடந்த கூறிய ஒன்று என எதிர்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமரைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், 'கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும், கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்தமைக்கும் பிரதமருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via