வடபழனி உள்ளிட்ட கோயில் திறப்பு

by Editor / 04-08-2021 10:19:05am
வடபழனி உள்ளிட்ட கோயில்  திறப்பு

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. பாதிப்பைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு போன்ற விஷேச தினங்களின் போது கோயில்களில் பக்தா்கள் அதிகளவு கூடுவது வழக்கம். கரோனா நோய்த் தொற்று காரணமாக, நிகழாண்டில் ஆடிப் பெருக்கு, ஆடிக் கிருத்திகை தினங்களன்று பக்தா்கள் கூடுவதைத் தவிா்க்க, கோயில்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் மூடப்பட்டன. குறிப்பாக, சென்னையில் புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி, சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் உள்ளிட்ட கோயில்களில் ஆகஸ்ட் 3-ஆம் தேதிவரை பக்தா்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை முதல் சென்னையில் உள்ள பிரதான கோயில்கள் திறக்கப்பட உள்ளன. அதேசமயம், கரோனா நோய்த் தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via