தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் :  வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 27-09-2021 03:08:55pm
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் :  வானிலை ஆய்வு மையம் தகவல்



தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்  வெளியிட்ட அறிவிப்பு:
"தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக,  தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கலியல் பகுதியில் 17 செ.மீ., குழித்துறையில் 15 செ.மீ., சூரலக்கோட்டில் 14 செ.மீ., தக்கலையில் 13 செ.மீ., கன்னியாகுமரி, நாகர்கோவிலில் தலா 12 செ.மீ., மைலாடியில் 11 செ.மீ., விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
27.09.2021: குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.27.09.2021: ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
27.09.2021: கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்"

 

Tags :

Share via