சதுரங்க போட்டிகள் - முதலமைச்சர் ஆய்வு

by Editor / 12-07-2022 03:59:31pm
சதுரங்க போட்டிகள் - முதலமைச்சர் ஆய்வு

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

ஜூலை 28 - ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

மாமல்லபுரத்தில் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டு, போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட குழுக்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர்

சதுரங்க போட்டிகளுக்காக மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் காட்சிதரும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது

சாலைப்பணிகள், நகரை அழகுப்படுத்தும் பணிகள், புதிய நிழற்குடைகள், விளம்பரங்கள், உணவகங்கள் நடத்துவோருக்கு தரமான உணவுகள் வழங்க பயிற்சி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது

 

Tags :

Share via