சங்கடம் தீர்க்கும் தசரத சனி ஸ்தோத்திரம் - சனிக்கிழமை சொன்னால் கிடைக்கும் நன்மைகள்

by Editor / 26-06-2021 12:04:28am
சங்கடம் தீர்க்கும் தசரத சனி ஸ்தோத்திரம் - சனிக்கிழமை சொன்னால் கிடைக்கும் நன்மைகள்

சங்கடம் தீர்க்கும் தசரத சனி ஸ்தோத்திரம் - சனிக்கிழமை சொன்னால் கிடைக்கும் நன்மைகள்

கருப்பு உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் தசரத மகாராஜா கூறிய ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்து நமஸ்காரம் செய்பவர்களை நான் துன்பப்படுத்தமாட்டேன் என்று சனிபகவானே கூறியுள்ளார்.

 சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரவும் சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று தசரத மகாராஜாவின் கதை மூலமாக நாராதருக்கு விளக்கியுள்ளார் சிவபெருமான். 

இதை படிப்பதன் மூலம் சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். தோஷங்கள் நீங்கும்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்திபெற்ற தர்பாராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று வந்தனர். அவர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடிவிட்டு சனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

சிவபெருமான் நாராதருக்கு சொன்ன கதை
சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று தசரத மகாராஜாவின் கதை மூலமாக நாராதருக்கு விளக்கியுள்ளார் சிவபெருமான். 

இதை படிப்பதன் மூலம் சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். தோஷங்கள் நீங்கும். 

நாரத முனிவர் ஒருமுறை சிவபெருமானைப் பார்த்து, பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் இதை நீங்கள்தான் விளக்க வேண்டும் என்று கேட்டார், 

அதற்கு சிவபெருமான், நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்று கூறி சனியால் ஏற்படும் சங்கடங்களை வென்ற தசரத மன்னரின் கதையை கூறத் தொடங்கினார்.

ரகு குலத்தில் பிறந்த தசரதன் மகா பராக்கிரமசாலி. தசரதனின் ஆட்சி காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வந்தது.

 சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் அமைச்சர்களையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார் அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். 

இதைத் தடுப்பது என்பது பிரம்மாவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.
அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான குதிரைகளோ கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது.

 தசரத சக்ரவர்த்தி ஆகாயத்தில் இன்னொரு சூரிய பகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் என வர்ணித்தார் சிவபெருமான்.

வில்லை வளைத்து காது வரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார். தேவர்கள்,அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான். 

ஆனாலும் சனியின் பார்வை தசரத சக்கரவர்த்தியை எதுவும் செய்யவில்லை.
சனிபகவான் ஆச்சரிய புன்னகை புரிந்தபடி ராஜராஜனே, உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.

 என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் யாரும் கிடையாது, என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள். 

நீ நிறைய புண்ணியங்களை செய்திருக்கிறாய். அதன் காரணமாகவே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்.

அதற்கு தசரத மகாராஜா, அந்த சனிபகவானே ஆச்சரியப்படும்படியான வரத்தை கேட்டார். ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உலக மக்களுக்கு எந்த துன்பத்தையும் தரக்கூடாது. சூரியர் சந்திரர் உள்ளவரைக்கும் எந்த காலத்திலும் அது நடக்கக்கூடாது என்று வரமாகக் கேட்டார். 

அதற்கு சனிபகவானோ, அவ்வாறே ஆகுக என்று கூறி வரம் கொடுத்தார்.

தசரத சக்ரவர்த்தியிடம் பேசிய சனிபகவான் உனக்காக மேலும் ஒரு வரம் கொடுக்கிறேன். என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னார், அப்போது தசரதன், ரோகிணிக்குள் பிரவேசிக்கும் போது கொடிய பஞ்சம் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர் அத்தகைய பஞ்சம் எந்த காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். 

அதற்கு சனிபகவான், அந்த வரம்தான் முதலில் கொடுத்து விட்டேன். மீண்டும் உனக்கான வரத்தைக் கேள், இந்த உலகம் உள்ளவரைக்கும் உன் புகழ் நிலைத்திருக்கும் என்று சொன்னார் சனிபகவான். 

வேறு வரத்தைக் கேள் என்று சொன்னார்.
தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...

🔯இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :

கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். 

உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன்.

 பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன். புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.
ஏ சனி பகவானே யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம். உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
மஹா பகவானும்,பயங்கரமனவனும்,கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , "ஏ ராஜேந்திரா, உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .
அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்று முதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது.
 தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .

அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.
கருப்பு உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் துன்பப்படுத்தமாட்டேன்.

கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன். ஏ ரகுநந்தனா, உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார். 

தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.

சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபார்கள்.

 இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.இதப் போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது. சனிபகவானே போற்றி போற்றி போற்றி,

வாழ்வை செழிக்க வைக்கும் ஆனி திருமஞ்சனம்.


திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும். ஆங்கில மாதம் ஜூன், ஜூலைக்கு இடைப்பட்டட காலத்திலும், தமிழ் மாதம் ஆனி உத்திர நட்சத்திரத்திலும், இந்த ஆனித் திருமஞ்சன விழா நடத்தப்படுகிறது.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். நடராஜப் பெருமான் வருடத்தில் ஆனி - மார்கழி மாதத்தில் மட்டுமே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆனி உத்திரமே, ஆடல் வல்லானுக்கான விழாவாக ஆனித் திருமஞ்சனம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஆனி மாதம் பல சிறப்புகளை தன்னுள் அடக்கியுள்ளது.

அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையில் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது.


பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பல 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் செய்கின்றனர்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம், காலைப் பகுதி மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை மாதம், மாலைப் பகுதி ஆனி மாதம், இரவுப் பகுதி ஆவணி மாதம், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. சந்தியா காலங்களான ஆனி - மார்கழியே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 18-ம் தேதி ஆனி உத்திர நட்சத்திரம் வருகிறது.

இந்த ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான், நமக்கெல்லாம் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் உபதேசம் செய்தார். இந்த ஆனித் திருமஞ்சன நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது. ஆவுடையார் கோயிலில், இந்த ஆனித் திருமஞ்சன விழா முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. மாணிக்கவாசகர் இந்த நன்னாளில் வெள்ளித் தேரில் மாட வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

இந்த ஆனி மாதத்தில் திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலிருந்து வஸ்திரங்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அரசியல் நிச்சயமற்ற ஒரு காலகட்டத்தில் திரு பிள்ளைலோகாச்சாரியார் தலைமையில் பலர், திருவரங்கத்திலிருந்து நம்பெருமாள், தேவி -  பூதேவி திருவுருவங்கள், திருப்பதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சுமார் இருபது வருடங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இதன் நினைவாகத் தான் இந்த வைபவம் ஆனி மாதத்தில் நடைபெறுகிறது.

நடராஜப் பெருமான் ஆனித் திருமஞ்சன தரிசனம் கண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைப்பதாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.


*ஆனித்திருமஞ்சனம் ஸ்பெஷல் !

1. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.

2. பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர்294 நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய

3. தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய

4. ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய

5. நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய

6. எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய

7. தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய

8. துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய

9. சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய

10. ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். ஆடிய

11. ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
அபயர்295 எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய

12. ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய

13. தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய

14. எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய

15. ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய

16. அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய

17. நாரண னாதியர் நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட்டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய

18. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின்றாடிய பாதம்.

*அருள்மிகு  ஸ்ரீ பச்சை அம்மன்  திருக்கோவில் 

முனுங்கபட்டு, செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். 

தீவிர சிவபக்தரான பிருங்கி முனிவர், மறந்தும் பிற தெய்வங்களை வழிபடாதவர். ஒருமுறை, கயிலையில் அம்மையும் அப்பனும் கொலுவீற்றிருந்த தருணத்தில், வண்டு ரூபத்தில் வந்த முனிவர் சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுவிட்டுச் சென்றார். இதைக் கண்ட பார்வதிதேவி துணுக்குற்றாள். பிருங்கிக்கு மட்டு மல்ல உலகத்தவர் எவருக்கும் தன்னையும் சிவனாரையும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் எழக்கூடாது என்று தீர்மானித்தாள். அதற்கு ஒரே வழி சிவனாரின் திருமேனியில் தானும் இடம்பெற வேண்டும் என்று முடிவுசெய்தாள். பூலோகம் சென்று பெரும் தவம் இயற்றி சிவனாரின் திருமேனியில் சரிபாதி இடம்பெற விரும்பி பூமிக்கு வந்து சேர்ந்தாள்.

பூமிக்கு வந்தவள் ஞானியரின் தவ பூமியாம் திருவண்ணாமலை நோக்கிப் பயணப் பட்டாள். வழியில் வாழை மரங்கள் நிறைந்த ஒரு இடத்தைக் கண்டாள். அத்துடன் பொழுதும் சாய்ந்து விட்டதால், அங்கேயே மண்ணால் சிவலிங்கம் எழுப்பி, தவத்தைத் துவங்க எண்ணினாள். ஆனால், சிவனாரின் திருவிளையாடல் வேறுவித மாக இருந்தது. அவர் அந்த வாழைத் தோட்டத்தில் இருந்த நீரூற்றுகளை எல்லாம் மறைந்துபோகச் செய்தார். அதையறியாத பார்வதிதேவி, தன் மகன்களான கணபதியையும் முருகனையும் அழைத்து, பூஜைக்கு நீர் கொண்டு வரும்படி உத்தரவிட்டாள். அதையேற்று புறப்பட்டவர்கள் வெகுநேரம் ஆகியும் திரும்பியபாடில்லை. எனவே, தன் கையில் இருந்த பிரம்பினால் பூமியைத் தோண்ட, அந்த இடத்தில் கங்கை பொங்கியது. அதேநேரம் மகன்கள் இருவரும் இரண்டு நதிகளுடன் அங்கு வந்து சேர்ந்தனர். மூன்று தீர்த்தங்களும் சங்கமித்ததால் அந்த இடம் முனுகூட்டு என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்தில் ‘முனுகப்பட்டு’ என்றானதாகச் சொல்கிறார்கள்.

இவ்வாறு நீர் கிடைத்ததும் பார்வதியம்மையும் தான் விரும்பியபடி லிங்கத் திருமேனி செய்து ஸ்தாபித்து, வாழைப் பந்தல் அமைத்து அதன்கீழ் அமர்ந்து பூஜையைத் தொடங்கினாள். இந்திரன் முதலான வானவர்கள் எல்லோரும் விண்ணில் கூடி நின்று இந்த அற்புதத்தைத் தரிசித்து வணங்கினர். பூஜை மற்றும் தவத்தின் பலனாக வெகுவிரைவில் அம்மைக்கு சிவதரிசனம் கிடைத்தது; அவள் எண்ணமும் ஈடேறியது. அத்துடன் பச்சை வண்ண மேனியராக நாராயணரும் காட்சி தந்து, அம்பாள் வேண்டிக் கொண்டபடி உலகம் பசுமை மிகுந்து செழித்திருக்க திருவருள் புரிந்தாராம். அடியவர்களும் முனிவர்களும் பிரார்த்தித்துக்கொள்ள அம்பாளும் இங்கே பச்சையம்மனாக கோயில் கொண்டாளாம். சிவபெருமான் இங்கே மன்னாதீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.


*33 கோடி தேவர்கள் என்றால் என்ன?

போன வாரம் செவ்வாய் கிழமை எங்கள் பக்கத்து கோவிலில் பசுமாட்டுக்கு (கோ பூஜையை சொல்லுகிறார்) பூசாரி பூஜை செய்தபோது தீபாராதனை காட்டி பசுவை சேவியுங்கோ பசுவை சேவித்தால் பிரும்மா விஷ்ணு சிவன் அஷ்டலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும் என்றார்! .

அப்படியானால் நம் இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனரா? 

 நமது ஹிந்துமதத்தில் நம்முடைய தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கூறிவது உண்மைதான்

முப்பத்து முக்கோடி என்பது 
33 கோடி ஆகும்.

ஓ...ஓ...

அப்படியானால் நமது ஹிந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் இருக்கின்றனவா? 

 இங்கே  “கோடி” என்பதை எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்

ஆனால் “கோடி” என்ற சொல் சமஸ்க்ருதத்தில் “ பிரிவு அல்லது வகை” என்பதைக் குறிக்கும்.

ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன என்பதை சொல்லவே முப்பத்து முக்கோடி என்கின்றனர் 

என்னசார் கோடி என்றால் பிரிவு என்கிறீர்கள் அது நம்பராகாதா?

கிராமங்களில் ஒருவர் அந்த தெரு கோடியிலுருந்து வரேன் என்றால் கோடி தெரு என்பதல்ல அர்த்தம் அதாவது 
அந்த தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பர் !

அது போல் கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எனபதல்ல அர்த்தம் அது வெண்மையும் அல்லாத மஞ்சளும் அல்லாத ஒரு கலர் வேஷ்டி ( வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்) 

கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு" என்பதே!

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் 

வசு ருத்ர ஆதித்ய ரூபம் என்று மூன்றாகப் பிரிப்பர்!

பொதுவாக அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும் பிதாமஹர் ருத்ர ரூபமாகவும் பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வார்கள்!

அதில் வசு கீழ் நிலை ருத்ரர் இரண்டாம் நிலை ஆதித்யர் மூன்றாம் நிலை இந்த மூன்று நிலையில் 31பிரிவுகள் அடங்கும்

அந்த 31 பிரிவுகள் எவை பார்பபோம் 

31 அதில் 

     ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு 
2)தாதா 
3) மித 
4) ஆர்யமா 
5) ஷக்ரா 
6) வருண 
7) அம்ஷ 
8) பாக 
9) விவாஸ்வான் 
10) பூஷ 
11) ஸவிதா 
12) தவாஸ்தா 

வசு நிலையில் 8 வகையாவன:

13. தர 
14. த்ருவ 
15. சோம 
17. அனில 
18. அனல 
19. ப்ரத்யுஷ 
20. ப்ரபாஷ 

ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்

21. ஹர 
22. பஹூரூப 
23. த்ரயம்பக 
24. அபராஜிதா 
25. ப்ருஷாகாபி 
26. ஷம்பூ 
27. கபார்தி 
28. ரேவாத் 
29. ம்ருகவ்யாத 
30. ஷர்வா 
31.கபாலி 

மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள் 

ஆக மொத்தம் = 33 வகையான

(பிரிவுகளான) தெய்வங்கள்

முப்பத்து முக்கோடி என்பது இதை தான்! நாம் போல் 33 கோடியும் இல்ல முப்பத்து முக்கோடியும் இல்ல !

இனிமேல் கோவில்களில் இந்து தெய்வங்களை வழிபடும் போது இதை மனதில் வைத்து கொண்டு வணங்கலாம்!!!
 

 

Tags :

Share via