உசிலம் பட்டி எம்.எல்.ஏ. ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு

by Admin / 27-08-2022 07:32:54pm
உசிலம் பட்டி எம்.எல்.ஏ. ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு

சென்னை பசுமைவெளிசாலையிலுள்ள ஒ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் சென்று மலர்க்கொத்து கொடுத்து  தன் ஆதரவைத்தெரிவித்தார்.இதுவரை  எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்தவர்  இன்று   அணி மாறியதன்  மூலம்   ஒ. பி. எஸ்ஸின்  எம்.எல்.ஏ.பலம்  நான்காக  அதிகரித்துள்ளது .அ.தி.மு.க எம்.பிக்கள் இருவர்  ஆதரவுடன் இருப்பதால் அ.தி.மு.க.அரசியல் களம்  மெல்ல  மெல்ல  சூடு  பிடிக்க  ஆரம்பித்துவிட்டது. நேற்று நடிகரும் இயக்குனருமான  கே.பாக்கியராஜ்  மைலாப்பூர்  நட்சத்திர  விடுதியில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via