ரேஷன்அரிசி கடத்தல் விவாகரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - சிறுவன் உள்பட 8  பேர் கைது 

by Editor / 25-04-2024 10:02:07pm
 ரேஷன்அரிசி கடத்தல் விவாகரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - சிறுவன் உள்பட 8  பேர் கைது 

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தகவல் கொடுத்ததாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் வீட்டில் 23ஆம் தேதி நள்ளிரவில் பாம்பு கார்த்திக் என்று அழைக்கப்படும் கார்த்திக் ராஜா தலைமையில் சென்ற 15 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது, அதேபோன்று ஊத்துப்பட்டி அருகே செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாரி செல்வத்தின் வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து கொளுத்தியது. 

இந்த சம்பவங்கள் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பாம்பு கார்த்திக் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மாதவா ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக    குப்பனாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், ஓணமாக்குளத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் , கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து, கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த சண்முகராஜ்,  கயத்தாறை சேர்ந்த ராஜா என்ற சண்முகராஜா , அதே பகுதி சேர்ந்த சகோதரர்கள் முத்துகிருஷ்ணன், நரசிம்மன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாம்பு கார்த்திக் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்

 

Tags :  ரேஷன்அரிசி கடத்தல் விவாகரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - சிறுவன் உள்பட 8  பேர் கைது 

Share via