ஓணம் பண்டிகை முன்னிட்டுகாய்கறி விலை இருமடங்கு கிடு கிடு உயர்வு

by Editor / 05-09-2022 10:56:09pm
ஓணம் பண்டிகை முன்னிட்டுகாய்கறி விலை இருமடங்கு கிடு கிடு உயர்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாகும் இந்த மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதிகப்படியான காய்கறிகள் கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தினந்தோறும் ஏற்றுமதியாவது வழக்கம்.

இந்நிலையில் வரும் வியாழக்கிழமை கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நடைபெற இருப்பதாலும் ஓணம் பண்டிகைக்கு கேரளா மக்கள் அதிகமாக காய்கறிகளை பயன்படுத்துவதாலும் கேரள மாநிலத்திற்கு அதிகப்படியான காய்கறிகள் தேவை இருப்பதாலும் கடந்த இரண்டு தினங்களாக காய்கறி விலை படிப்படியாக உயர்ந்து  ஓணம் காய்கறி வியாபாரம் கடைசி நாளான இன்று காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து நல்ல விலைக்கு விற்பனையானது கிலோ 20 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை விற்பனையான தக்காளி இன்று ஒரு கிலோ அறுபது ரூபாய் வரை விலை போனது. அதாவது 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டியின் விலை 700 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை விலை போனது.

 அதேபோல் கிலோ 20 ரூபாயிலிருந்து 25 ரூபாய் விலை போன சின்ன வெங்காயத்தின் விளையும் இன்று 60 ரூபாய் வரை விலை போனது. அதேபோல் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக ஒரு கிலோ முருங்கக்காய் அதிகபட்ச விளையான இருபது ரூபாய் வரை விலைபோனது. அவற்றின் விலையும் உயர்ந்து இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் 65  க்கு விலை போனது. அதேபோல் நார்த்தங்காய் விளையும் உயர்ந்தது. பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை போன வெண்டைக்காய் இன்று ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையானது அதேபோல் பயிர் வகைகளும் மற்ற காய்கறிகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்து இன்று விற்பனையானது. இந்த விலை உயர்வால் ஒட்டன்சத்திரம் மற்றும் வெளி மாவட்ட மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஓணம் பண்டிகை  வியாபாரம் இன்று முடிவடைந்த நிலையில் அடுத்து இரண்டு தினங்களுக்கு மேல் இந்த காய்கறி விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் விவசாயிகளும் தெரிவித்தனர். 

 

Tags :

Share via