சவுதி அரேபியாவில் இருந்து தமிழக அரசின் கடனை அடைக்க 90 ஆயிரம் அனுப்பிய தமிழகப் பொறியாளர்

by Editor / 13-09-2022 09:24:15pm
 சவுதி அரேபியாவில் இருந்து தமிழக அரசின் கடனை அடைக்க 90 ஆயிரம் அனுப்பிய தமிழகப் பொறியாளர்

திருச்சி மாவட்டம் துறையூர் கெப்பம்பட்டி கிழக்கு காலனியை சேர்ந்தவர் சின்ன ராஜா செல்லதுரை, 
இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். என்ஜினீராக பணியாற்றும் சின்ன ராஜா செல்லதுரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
 அதில் நான் தற்போது சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறேன்.
பொருளாதாரம் படித்துள்ளேன். 202- 23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி  வழியாக அறிந்தேன். அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி தமிழக அரசின் கடன் 6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 -ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதன்படி கணக்கிட்டால் ஒவ்வொரு தமிழன் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் ரூபாய் 90 ஆயிரத்து 558 ஆக உள்ளது. இதையறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். எனவே தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் எனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து கடந்த ஆறு மாதங்களாக சேமித்த பணம் 90 ஆயிரத்து 558 முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன். தமிழக அரசின் கடனை செலுத்துவதற்கு எனது பங்களிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் பிறந்ததை நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். இந்த தொகையை பெற்றுக் கொண்ட தமிழக அரசு அதற்கு ரசீதை அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பாக  சின்ன ராஜா செல்லதுரைக்கு தமிழக நிதித்துறை இணைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நீங்கள் அனுப்பி வைத்த மதிப்பு மிக்க உங்கள் பங்களிப்புக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via