சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் அதிவேகமாக மோதி விபத்து 7 பேர் படுகாயம்

by Staff / 14-09-2022 12:06:08pm
சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் அதிவேகமாக மோதி விபத்து 7 பேர் படுகாயம்

கன்னியாகுமரி அருகே அதிவேகமாக வந்த பள்ளி வாகன சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 18 பேர் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு தனியார் வேன் மூலம் புறப்பட்டு சென்றனர். ஸ்வாமிநாதபுரம் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து  நிலைதடுமாறி சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது இதில் சுற்றுலா வேனில் வந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo