பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 17-09-2022 12:16:56pm
பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் போது அவர் பிரதமருக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்தார்.

ரஷ்ய பாரம்பரியத்தின் படி, முன்கூட்டியே வாழ்த்து செய்திகளை அனுப்பி முடியாது. எனவே புடின் வாழ்த்துக்கள் சொல்லாமல் பிரத்யேகமாக வாழ்த்தினார்.ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், மூலோபாய சிறப்பு கூட்டாண்மை தன்மையைக் கொண்டிருப்பதாகவும் புடின் கூறினார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வதாக ரஷ்ய அதிபர் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

 

Tags :

Share via