திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் வெட்டி படுகொலை -சரக்கு வியாபாரியான எஸ்தர் தலைமறைவு.

by Editor / 21-09-2022 11:06:21am
 திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் வெட்டி படுகொலை -சரக்கு வியாபாரியான எஸ்தர் தலைமறைவு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது திமுக வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே தனது கணவனை கொலை செய்த லோகேஸ்வரி என்கின்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இது குறித்து திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தொடர்ந்து எஸ்தரிடம் இந்த பகுதியில் சரக்கு விற்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் லோகேஸ்வரியின் வருமானம் பாதித்துள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த லோகேஸ்வரி சதீஷை தன் வீட்டிற்கு வரவழைத்து சரமாரியாக தலையில் அரிவாளால் வெட்டி கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.இதுகுறித்துத்தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திமுக வார்டு உறுப்பினர் கொலை செய்யபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo