தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

by Editor / 25-09-2022 04:17:36pm
 தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினர்  அண்ணா அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவின் மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் பொறுப்பாளர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது.

 இந்த நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக மீண்டும் சிவபத்மநாதன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், வடக்கு மாவட்ட செயலாளர் பணியாற்றி வந்த செல்லதுரை மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று  தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினர். அதன்படி, இதுவரை இல்லாத அளவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சிறப்பாக பணியாற்றியதாகவும், அடிமட்ட தொண்டர்கள் வரை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களையும், 3 நகராட்சியில், இரண்டு நகராட்சிகளையும், 9 பேரூராட்சிகளின், 8 பேரூராட்சிகளையும் கைப்பற்றி இதுவரை இல்லாத அளவிற்கு திமுக மாபெரும் வெற்றி பெற்றதற்கு இரவு பகல் பாராது உழைத்த மாவட்ட செயலாளர் செல்லத்துரை தான் காரணம் எனவும், ஆகவே அவரை மாற்றும் முடிவை கைவிட்டு திமுக தலைவர் இதில் கவனம் செலுத்தி மீண்டும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக செல்லதுரையை நியமனம் செய்ய பரிசீலனை செய்ய வேண்டுமென தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் என 50 நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டு  தீர்மானத்தை நிறைவேற்றியா நிலையில் நேற்று சென்னை புறப்பட்டு சென்றனர்.மேலும் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செல்லத்துரையின் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினர்  அண்ணா அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Tags :

Share via