தமிழ்நாடு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 28-09-2022 05:25:48pm
தமிழ்நாடு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன் சங்கப் பிள்ளை தலைமை வகித்தனர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கிடவும் சட்ட கூலி ரூபாய். 273 யை குறைக்காமல் வழங்கிடவும் அனைவருக்கும் சமமான கூலியை வழங்கிடவும் கணிப்பொறியில் குளறுபடி என்று காரணம் காட்டி வேலையை புறக்கணிக்காதே என கேட்டு தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக கண்டன கோஷங்கள் எழுப்பிக் கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தனர் பிறகு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்

 

Tags :

Share via