அமெரிக்கா செல்லகிறார் ரஜினிகாந்த் - ஓன்றிய அரசு அனுமதி!

by Editor / 14-06-2021 10:19:36am
அமெரிக்கா செல்லகிறார் ரஜினிகாந்த் - ஓன்றிய அரசு அனுமதி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார். அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்த போது கொரோனா பரலல் ஏற்பட்டது.

இதனால் அவரின் அமெரிக்க பயணம் கடந்த ஆண்டு தடைபட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா 2ஆவது அலையும் வந்ததால் இடைப்பட்ட நேரத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்தார். அடுத்தது 3ஆவது அலை வரும் என்று கூறப்படுகிறது.

எனவே தற்போது பரவல் குறைந்திருக்கும் போதே அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். கொரோனா காலம் என்பதால் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

அவருடன் குடும்பத்தினரும் செல்ல இருக்கின்றனர். சிறப்பு விமானத்தில் 14 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். சிறப்பு தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்பதால், அவர் பேசி அனுமதி பெற்றுள்ளார்.

 

அமெரிக்கா செல்லகிறார் ரஜினிகாந்த் - ஓன்றிய அரசு அனுமதி!
 

Tags :

Share via