பொன்னியின் செல்வன் திரைப்படவிமா்சனம்

by Admin / 30-09-2022 01:21:33pm
பொன்னியின் செல்வன் திரைப்படவிமா்சனம்


கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக்கொண்டு மிகந்த பொருட்செலவில் நீண்டகாலமாக எடுக்கப்பட்டு வந்த பொன்னியின் செல்வன் திரைபபடத்தை லைகா நிறுவனம் நட்சத்திர பட்டாளங்களுடன் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம்.10 ஆம் நூற்றாண்டு என்பதால் பெருபான்மையான இடங்களை அரங்க அமைப்பு,கிராபிக்ஸ் உத்தியின் மூலம் படத்தை நகர்த்த வேண்டிய சூழல் தவிர்க்க முடியாதநிலையில் படசிகுழு அதிகம் முயன்று படத்தை நாவலோடு ஒட்டி போகிற நிலையிலே படம் பிடித்திருக்கிறார்கள்.

எழுத்தில் படித்தவர்கள் தங்களுக்கென்று உள்ள கறபனையில் வந்தியதேவனை,குந்தவையை,ஆதித்த சோழனை என கற்பனை வழி காட்சிபடுத்தியிருக்கலாம்.அத்துடன் இயக்குனரின் பிற பட சாயலும் சேர்ந்து இங்கே புதிய பரிமாணத்தில் உருவாக்கப்பட்ட சோழர்கால கதாபாத்திரங்களும் இணைந்து கலந்து வெளிப்பட்டிருக்கலாம்.

தோட்டதரணி,ஒளிப்பதிவாளரின் இணைவில் கிட்டதட்ட பழையகாலத்தை பார்ப்பது போன்ற தோற்றம் காட்சிகளாக வந்துள்ளது.அழகு பதுமைகளாக மிளிர்கிறார்கள் ஐஸ்வர்யாராய், த்ரிஷா..

கார்த்தி,ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், நாசர் யாரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.கல்கியின் நாவலை இளைய தலைமுறையினர்  அட்டைப்படத்தை மட்டும் போட்டோ எடுத்து வாட் அப் சேட்டஸ் வைக்காமல் படிக்க வேண்டும். மணிரத்தினத்திற்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் பாராட்டுக்கள். குறைகள் இரண்டாம் பாகத்தில் சரி செய்யப்படலாம்.    

பொன்னியின் செல்வன் திரைப்படவிமா்சனம்
 

Tags :

Share via