8 ஆண்டு கால பயணத்தை முடித்துக் கொண்ட மங்கள்யான்

by Staff / 03-10-2022 05:41:33pm
8 ஆண்டு கால பயணத்தை முடித்துக் கொண்ட மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' தயாரித்த மங்கள்யான் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.சி., 25 ராக்கெட் வாயிலாக 2013 நவ., 5ல் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மங்கள்யான் செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து, அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, இஸ்ரோ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

 

Tags :

Share via