காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவு- பார்வர்டு பிளாக் கதிரவன் அறிவிப்பு.

by Editor / 25-01-2023 08:16:18am
காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவு- பார்வர்டு பிளாக் கதிரவன் அறிவிப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதன் பின் கட்சியின் 19-வது மாவட்ட மாநாடு செக்கானூரணியில் நடைபெற்றது. கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பி.வி. கதிரவன் தலைமை வகித்தார். மாநாட்டின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த கதிரவன் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் முழு ஆதரவை அளிப்பதோடு தேர்தல் பணிகளையும் மேற்கொள்வோம் என்றார்.

 

Tags :

Share via