டெல்லி - நெரிசலில்  திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

by Editor / 27-09-2021 03:19:48pm
 டெல்லி - நெரிசலில்  திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

 


மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் 300 நாட்களை கடந்த நிலையில் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.


அதன்படிபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கியது நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டம் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதனால் பல கி.மீ. தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.


போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். முழு அடைப்பு போராட்டத்தால் டெல்லியே ஸ்தம்பித்து இருக்கிறது.


பாஜக ஆளாத மாநில அரசுகள் இந்த பாரத் பந்துக்கு தார்மீக ஆதரவைக் கொடுத்துள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு கட்சியும் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து இந்த முழு அடைப்பை சாத்தியப்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


பாரத் பந்த் காலை 6 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக அமைப்புகள் மூடப்படும். பொது நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்படும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்திருந்தது. இதனால் பாஜக ஆளாத மாநிலங்களில் முழுவதும் முடங்கியுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 

 

Tags :

Share via