மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை

by Admin / 11-04-2023 01:43:32pm
 மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை

முந்தைய திமுக ஆட்சியின் பொழுது மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கு வேலை வழங்கியது .இதை 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மக்கள் நல பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது .இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மக்கள் பணியாளர்களுக்கு மீண்டும் பணியை வழங்க உத்தரவிட்டது .இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், திமுக ஆட்சி மீண்டும் வந்ததை .அடுத்து மக்கள் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் ஊதியம் 7500 வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பை உச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. அதில் மக்கள் நல பணியாளர்கள் வேலை இழப்பின் காரணமாக வாழ்க்கை ஆதாரம் இழந்து தவிப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பை வழங்குவதை நீதிமன்றம் பாராட்டியதோடு அவர்களுக்கு எதிராக முந்தைய அரசு தொடுத்திருந்த பணி நீக்கும் ஆணை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தீர்ப்பு அளித்தது..

 

Tags :

Share via