வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு.

by Editor / 04-10-2022 09:15:42am
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு.

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாகும். இந்நிலையில், வழக்கமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். விடுமுறை தினம் என்பதால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via