ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

by Staff / 07-10-2022 11:23:47am
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, 'இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2012, 2014இல் அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிகரமாக நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் ஆதரவளிக்காமல் புறக்கணித்தன. சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, கொரியா குடியரசு, உக்ரைன் உள்ளிட்ட 20 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
 

 

Tags :

Share via