தி.மு.க பொதுக்குழுக்கூட்டம்  இன்று நடைபெறுகிறது

by Admin / 09-10-2022 10:01:11am
தி.மு.க பொதுக்குழுக்கூட்டம்  இன்று நடைபெறுகிறது


இன்று காலை 10.00 மணிஅளவில் தி.மு.க.பொதுக்குழுக்கூட்டம்கீழ்ப்பாக்கம்செயிண்ட் ஜார்ஜ் மேனிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.அண்மையில் தி.மு.க உள்கட்சித்தேர்தல் நடைபெற்றது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அங்கி
காரம் அளிக்கவும் தி.மு.கவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாகப்போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.மாநில மகளிரணி தலைவராக இருக்கும் கனிமொழி மாநில துணைப்பொதுச்செயலாளராவதற்காகவும் இப்பொதுக்குழுவில்  வாய்ப்புள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் தம் ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் .முதலமைச்சரை வரவேற்க வழி நெடுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு அறுசுவை உணவு தயாராகி வருகிறது.

 

Tags :

Share via