23-ந்தேதி கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.

by Staff / 12-10-2022 05:38:33pm
23-ந்தேதி கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.

தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள புனித கோவிலுக்கு செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். வருகிற 23-ந் தேதி அவர் கேதார்நாத் செல்வார் என தெரிகிறது. கேதார்நாத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்த தகவலை பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்தது. இதையடுத்து உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, கேதார்நாத் சென்று அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, மாநிலத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கு ஏற்படும் தடைகளை விலக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டேன் என்று கூறினார்.

 

Tags :

Share via