ஒடிசா முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 16-10-2022 04:06:53pm
ஒடிசா முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் வாழ்த்து செய்தியில், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இயற்கைப் பேரிடர்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளித்து, இளம் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via