புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம்

by Staff / 17-10-2022 11:06:02am
புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம்

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு அங்கன்வாடியுடன் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளில் நாட்டிலேயே முதல் முறையாக தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இதனை அறிமுகப்படுத்தினர். பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையின் கீழ் புதிய, வலிமையான, தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
 

 

Tags :

Share via