மும்பை விமான நிலையத்தில் நடைபெறும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் 12 மணி நேரம் மட்டுமே..

by Staff / 18-10-2022 12:39:34pm
மும்பை விமான நிலையத்தில் நடைபெறும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் 12 மணி நேரம் மட்டுமே..

மும்பை விமான நிலைய தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு, அதானி குழுமத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் நடைபெறும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 6 மணிநேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் பருவமழைக்கு பிந்தைய தடுப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல விமானங்கள் புறப்படும் நேரம் மற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories