ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராமல் தடுத்து நிறுத்தினார்

by Staff / 18-10-2022 01:28:22pm
 ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராமல் தடுத்து நிறுத்தினார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், "சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை. 2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை; ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர். அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via