புகைபிடிக்கும் பறவை... வைரலாகும் வீடியோ

by Staff / 18-10-2022 05:46:31pm
புகைபிடிக்கும் பறவை... வைரலாகும் வீடியோ

நடனமாடும் பறவைகள், சிரிப்பொலி எழுப்பும் பறவைகள், அழுகுரல் பறவைகள் என்று பலவகை பறவைகளை பார்த்திருப்போம். புகை பிடிக்கும் பறவையை பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு பறவை இணையத்தை கலக்கி வருகிறது.புகைபிடிக்கும் பறவை என்றால் உண்மையில் புகைபிடிப்பது அல்ல. சில பறவைகள் தன் இனத்திற்குள் ஒலி எழுப்பிக்கொள்ளும் பொது இறுதியில் அதன் அலகில் இருந்து புகை போன்று வெளியே வருகிறது. அதனால் தான் அந்த பறவையை அப்படி குறிப்பிடுகின்றனர்.ஆனந்த் ரூபனகுடியின் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், ஒரு அற்புதமான வெள்ளைப் பறவை, பச்சை-நீல நிற தலை மற்றும் கழுத்துடன், பல முறை கத்திவிட்டு வாயிலிருந்து புகை மூட்டத்தை வெளியேற்றுவதைக் காட்டியது. இணைய பயனர்கள் இந்த பறவையை வெற்று-தொண்டை பெல்பேர்ட்( Bare-throated bellbird) என்று அடையாளம் கண்டுள்ளனர். இது பிரதானமாக பிரேசிலில் காணப்படுகிறது.

 

Tags :

Share via