தடையை மீறி போராட்டம் ஈபிஎஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது

by Editor / 19-10-2022 09:48:27am
தடையை மீறி போராட்டம்  ஈபிஎஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது

இன்றுடன் சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைகிறது. இந்நிலையில, சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது.

ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.பி., எம்எல்ஏ-க்களை போலீசார் கைது செய்தனர்.தடையை மீறி கூட்டம் நடத்தியதால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கைது செய்து எக்மோர் ராஜரத்தினம்மைதானத்திற்கு அழைத்துச்சென்றனர்.அங்கே அ.தி.மு.க வினர் செய்தியாளர்களைச்சந்திக்ககூடாதுஎன்று சொல்ல ,ஷஎடப்பாடி பழனிசாமி காவல் துறையினரோடு கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்பு செய்தியாளர்களிடம்எடப்பாடிசபாநாயகருக்கு ஆர்.வி.உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக அறிவித்து கடிதம்  கொடுத்துள்ளோம்.ஆனால்,சபாநாயகர் இடம்ஒதுக்காமல் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகச் செயல்  படுவதாகக்கூறினார். கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

 

Tags :

Share via