62 பேர் கொண்ட பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

by Staff / 19-10-2022 11:43:49am
 62 பேர் கொண்ட பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 62 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவின் மத்திய தேர்தல் சமதி வெளியிட்டுள்ளது.
மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் செராஜி தொகுதியில் போட்டியிடுகிறார். அனில் சர்மா மண்டி தொகுதியிலும், சத்பால் சிங் சதி உனா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஐந்து பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். சில சிட்டிங் எம்எல்ஏக்கள் விலக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, 46 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. வேட்பாளர் பட்டியலில் 19 பேர் சிட்டிங் எம்எல்ஏக்கள். ஆறு பேர் புது முகங்கள். பட்டியலில் 13 பேர் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பிசிசியின் முன்னாள் தலைவர்கள் சுக்விந்தர் சிங் சுக் மற்றும் குல்தீப் சிங் ரத்தோர் ஆகியோர் நடவுன் மற்றும் தியோங் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். யஷ்வந்த் சிங் கன்னா (சுராக்), கிம்மி ராம் (பாங்கர்), விவேக் குமார் (ஜண்டத்தா), தயாள் பியாரி (பச்சாத் சிர்மவுர்), ரஜ்னீஷ் கிம்தா (சோபால்) மற்றும் குல்தீப் சிங் ரத்தோர் (தியோங்) ஆகியோர் புதிய முகங்கள்.இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via