இடி - மின்னலுடன் கனமழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Editor / 20-10-2022 08:54:05pm
 இடி - மின்னலுடன் கனமழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான்  மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைத்துள்ளதால் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரையில் இன்று இடி- மின்னலுடன் துவங்கிய கனமழையானது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்,புதூர், மூன்றுமாவடி, தல்லாகுளம், கோரிப்பாளையம்,அண்ணா நகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை, சிம்மக்கல், விளக்குத்தூண், பெரியார் பேருந்து நிலையம், காளவாசல்,  பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான விமான நிலையம்,அவனியாபுரம், கப்பலூர், திருமங்கலம், திருநகர்,கருப்பாயூரணி சிலைமான் ஒத்தக்கடை அப்பன் திருப்பதி அழகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த கன மழையால் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது. தீபாவளி துணிமணிகள், பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.

 

Tags :

Share via