அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்

by Staff / 22-10-2022 05:03:06pm
அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர் ஜெட் விமானத்தில் பயணம் செய்து வந்தவர் மலப்புரம் மாவட்டம் காடம்புழா பகுதியைச் சேர்ந்த முனீர் (42). இவர் சந்தேகிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இவரை கலால் துறையினர் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து இவரை உடற் பரிசோதனை செய்தபோது இவர் தனது உடலுக்குள் மல துவாரத்தில் ஒளித்து வைத்திருந்த 44.13 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1185.90 கிராம் எடை கொண்ட 4 தங்க கேப்ஸூல்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் இவற்றை உறைகளில் வைத்து அதனை ஒளித்து வைத்து கடத்தி வந்தது கலால் துரயினே விசாரணையில் வெளியானது. இவற்றை உருக்கி எடுத்தால் 1008 கிராம் எடை கொண்ட சுத்தமான 24 கேரட் தங்கம் கிடைக்கும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து கைதான முனீர் அங்கமாலி முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via