மயிலாடுதுறையிலிருந்து-செங்கோட்டைக்கு தொடங்கியது புதிய ரயில் சேவை எக்ஸ்பிரஸ் ரயில்

by Editor / 24-10-2022 01:26:30pm
மயிலாடுதுறையிலிருந்து-செங்கோட்டைக்கு தொடங்கியது புதிய ரயில் சேவை எக்ஸ்பிரஸ் ரயில்

தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வரும் 16847/16848 ரயிலையும், மதுரை - செங்கோட்டை இடையே இயங்கி வரும் 06665/06662 ரயிலையும் ஒன்றாக இணைத்து, ஒரே ரயிலாக இயக்கத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி அக்டோபர் 25 ஆம் தேதி முதல் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் 16847 சேவை தொடங்குகியாது.. மயிலாடுதுறையில் இருந்து இந்த ரயில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டது,
குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 14 பெட்டிகளுடன் இயங்குகிறது.இன்று  இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

 

Tags :

Share via

More stories

Logo