முதலமைச்சரின் பசும்பொன் வருகை ரத்து

by Editor / 29-10-2022 09:28:24am
முதலமைச்சரின் பசும்பொன் வருகை ரத்து

முதலமைச்சரின் பசும்பொன் வருகை ரத்து மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாக வீட்டில் ஓய்வெடுக்கிறார்.

செய்தித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:

முதலமைச்சர் அவர்களுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.எனவே, வரும் 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், முதலமைச்சர் சார்பில், மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்  .இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via