பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 29ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

by Editor / 20-01-2023 08:56:00am
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 29ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29ஆம் தேதி உபகோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று காப்புக்கட்டு நடக்கிறது. பிப்., 4ஆம் தேதி தைப்பூசத்தன்று சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது

 

Tags :

Share via