4 வயது சிறுமி கொலை முன்னாள் ராணுவ வீரருக்கும்,அவரது மனைவிக்கும் இரட்டை ஆயுள் தண்டனை

by Editor / 29-10-2022 09:57:14am
4 வயது சிறுமி கொலை  முன்னாள் ராணுவ வீரருக்கும்,அவரது மனைவிக்கும் இரட்டை ஆயுள் தண்டனை

சென்னை, அன்னனுார் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியின் தாயார் ஒருவர், 2019ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் மாஜி ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம், 63, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும், இந்த குற்றத்தை மறைத்த அவரது மனைவி ராஜம்மாள் (வயது 57) உடந்தையாக செயல்பட்டார் என புகார் கொடுத்தார்.அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் மீது நேற்று மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ராதேவி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில் மீனாட்சிசுந்தரம், அவரது மனைவி ராஜம்மாள் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.மேலும், சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகையாக, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணை பிறபித்துள்ளார்.
 

4 வயது சிறுமி கொலை  முன்னாள் ராணுவ வீரருக்கும்,அவரது மனைவிக்கும் இரட்டை ஆயுள் தண்டனை
 

Tags :

Share via