ஆன்லைனில் முதலீடு ரூ;41 லட்சம் பணம் மோசடி  4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஒருவர் கைது 

by Editor / 20-04-2023 10:35:38pm
ஆன்லைனில் முதலீடு ரூ;41 லட்சம் பணம் மோசடி  4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஒருவர் கைது 

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி ஐஸ்வர்யா என்பவரது வாட்ஸ்அப்பிற்கு வந்த லிங்க் மூலம் போலியான முதலீடு நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பல தவணைகளில் மொத்தம் ரூபாய் 24,42,186/- பணம் முதலீடு செய்து மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து மேற்படி ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, மேற்படி ஐஸ்வர்யா மற்றும்  தூத்துக்குடியைச் சேர்ந்த 13 பேரிடம் போலியான  முதலீடு நிறுவனத்தின் மூலம் ரூபாய் 41,05,949/- பணம் மோசடியில் ஈடுபட்ட சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சங்கர் மகன் ரோஷன் (28) என்பரை கடந்த 25.02.2022 அன்றும், கேரளா பாலக்காடு கரியம்பழா பகுதியை சேர்ந்த முகம்முது குஞ்சிசாலி மகன் முகம்மது சாகிப் உசைன் (25) மற்றும் பாலக்காடு போம்பரா பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் ஜேம்ஸ் ஜார்ஜ் (25) ஆகிய இருவரையும் கடந்த 07.04.2022 அன்றும், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் பிரேம்குமார் (29) என்பவரை கடந்த 21.04.2022 அன்றும் சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) . கார்த்திகேயன்   மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்   சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி வழக்கில் மற்றொரு எதிரியான பெங்களூர் மாருதி நகரை சேர்ந்த பாபு மகன் அவினாஷ் பாபு (23) என்பவரை இன்று கைது செய்து சிறையிலடைத்தனர். மேற்படி எதிரி அவினாஷ் பாபு வங்கி கணக்கில் சுமார் 14 கோடி அளவிலான பணபரிவர்தனைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
 

 

Tags :

Share via