சூரசம்ஹார வைபவம் நிறைவடைந்தது.

by Editor / 31-10-2022 12:27:27am
சூரசம்ஹார வைபவம் நிறைவடைந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு நடைபெற்ற சாயாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சந்தோச மண்டபத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் 108 மகாதேவர் சன்னதிக்கு மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.

 அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அந்த கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு கந்தசஷ்டி யாகசாலையில் 6 நாட்கள் வைக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். இதை சாயாபிஷேகம் என்று அழைப்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக  நடக்கும் இந்த அபிஷேகத்தை  முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்பினார்.
இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடைந்தது. விரதமிருப்பவர்கள் இன்நிகழ்வு முடிந்தவுடன் விரதத்தை பூர்த்திசெய்ய தொடங்கினர்

 

Tags :

Share via