மணிகண்டனை அதிமுகவிலிருந்து நீக்காதது ஏன்?- புகழேந்தி

by Editor / 22-06-2021 08:58:16am
மணிகண்டனை அதிமுகவிலிருந்து நீக்காதது ஏன்?- புகழேந்தி

சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மணிகண்டன் மீத் பாலியல் வழக்குத் தொடரப்பட்டுத் தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.புகழேந்தி, 'முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் வெளியில் வந்தவுடன், முதலில் அது குறித்து தனக்குத் தெரியாது என்றார். பின்னர், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் 5 லட்ச ரூபாய் கடன் கொடுத்திருப்பதாக சொன்னார். அதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு அபார்ட்மென்டில் 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாக கூறினார்.

அப்படிப்பட்ட ஒரு நபரை இதுவரை அதிமுகவிலிருந்து நீக்காததன் காரணம் என்ன. இன்னும் அவர் கட்சியில் இருக்கிறார். அவர் முதலில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதிமுக தொண்டர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரேயொரு நிமிடத்தில் மணிகண்டனை நீக்கியிருப்பார்' என்று கொதி கொதித்துப் பேசியுள்ளார்.

 

Tags :

Share via