பட்ஜெட்கூட்டத்தில் அதிரடி அறிவிப்புக்கள்..?

by Editor / 27-02-2023 11:28:17pm
பட்ஜெட்கூட்டத்தில் அதிரடி அறிவிப்புக்கள்..?

2023 - 24 ஆம்  நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்தபின் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த நிலையில், வேறு என்னென்ன புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Tags :

Share via