டோங்கா கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு

by Admin / 18-01-2022 04:14:31pm
டோங்கா கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு


தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான டோங்கா கடந்த 15ஆம் தேதி கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை மற்றும் அதனால் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை தொட்ட சுனாமி புவியியல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மிக சக்திவாய்ந்த எரிமலை என கருதப்படும் இந்த இயற்கை சீற்றம் சென்றமாதம் முதலில் லேசாக ஆரம்பித்ததாகவும் பிறகு இந்த மாதம் 13ஆம் தேதி முதல் வீரியம் பெற்று.

15ஆம் தேதி உக்கிரமடைந்த நிலையில் திடீரென சுனாமி தாக்கம் அடைந்தது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதேபோல் சுமார் 8,000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வட அமெரிக்கா மற்றும் ஜப்பானை  தொடும் அளவுக்கு சுனாமியின் தாக்கம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்

 

Tags :

Share via